சனி, 22 மே, 2010

எனது நகரம் இரத்தினபுரி

எனது நகரம் இரத்தினபுரி



இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றும், சபரகமுவா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தையும் இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அரசியல்
மாநகரமானது மாநகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சபை 15 ஆசனங்களைக் கொண்டுள்ளது. 2006 உள்ளூராட்சி தேர்தலின் போது 29159 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் இரத்தினபுரி மாநகரக எல்லைக்குள் இருந்தனர்
பொருளாதாரம்
இரத்தினக்கல் வியாபாரம்
இரத்தினபுரி நகரின் பொருளாதாரம் இரத்தினக்கல் வியாபாரத்தில் பாரிய அளவில் தங்கியுள்ளது. இலங்கையின் முன்னணி இரத்தினக்க்ல வியாபாரிகள் இரத்தின்ப்புரி நகரை தளமாக கொண்டுள்ளனர். வெளிநாட்டவர்களுன் இங்கு இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். இரத்தினக்கல் அகழ்வுக் குழிகளை நகரைச் சுற்றியப்பகுதிகளில் காணலாம். ஒவ்வொருநாள் காலையில் நகரின் மையத்தில் இரத்தினக்கல வியாபாரம் நடைபெறும். வெளிப்பகுதிகளில் இருந்தும் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அதிகளவானோர் வருகின்றனர். மடகாஸ்கர் நாடில் உயர்தரத்திலான இரத்தினக்கற்களில் கண்டுப்பிடிப்பைத் தொடர்ந்து நகரின் வியாபாரிகள் இரத்தினக்கல் வியாபாரத்துக்காக மடகஸ்கார் செல்கின்றனர்.
விவசாயம்
இந்த நகரம் விவசாயம் சார்ந்த தொழில்களும் நன்றாக முன்னேறியுள்ளன. தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் இந்நகரத்தை சுற்றி காணப்படுகின்றன. ஒரு காலத்தின் இந்நகரத்தை சுற்றியும் எங்கு நோக்கினும் நெல் வயல்களாக இருந்தது. எனினும் தற்காலத்தில், பல விவசாயிகள் நெல் சாகுபடியை விடுத்து ரத்தின சுரங்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், இந்நகரத்தின் நெல் சாகுபடி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்படுகிறது. மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களும் பல காய்கறிகளும் சந்தை விற்பனைக்காக இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
காலநிலை
இரத்தினபுரி ஈர மண்டலம் என அழைக்கப்படும் இலங்கையில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்லது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென் மேற்கு பருவமழையின் மூலமாக பெரும்பாலும் மழையினை பெறுகிறது. வருடத்தின் பிற மாதங்களில், வெப்பசலன மழையினை(Convective Rainfall) பெறுகிறது. இதானல் நிகழும் வருடாந்திர மழைப்பொழிவு 4,000 மீ.மீ முதல் 5,000 மி.மீ ஆகும். சராசரின் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரீ செல்சியஸ் வரை வேறுபடும். மேலும் மிகவும் ஈரப்பதம் நிறைந்த பகுதியாக இரத்தினபுரி விளங்குகிறது
வெள்ளப்பெருக்குகள்
இரத்தினபுரி நகரம் காலு(Kalu) ஆற்றின் வெள்ளப்பெருக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே, பொதுவாக மே மாதத்தில் இந்நகரம் வெள்ளப்பெருக்கால் அவதிப்படும். மேலும், இந்த ஆற்றை சுற்றி அணை ஏதும் கட்டப்படாததால், ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலையில் இந்நகரம் உள்ளது. வெள்ளப்பெருக்கை தடுக்க பல திட்டங்களை முன்வைக்கப்பட்ட போதிலும், எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து இது வரை சந்திக்காத மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை மே 2003 அன்று சந்தித்தது.
வழிபாட்டிடங்கள்
இந்நகரத்தை சுற்றி பல வழிபாட்டுத்தலங்கள காணப்படுகின்றன. இவ்விடத்தில் பௌத்தர்கள் பெரும்பாண்மையினராக உள்ளதால், பௌத்த வழிபாட்டு தலங்களை மிக அதிகமாக காணப்படுகின்றன. இருந்தாலும் கூட, பிற மதங்கள் சார்ந்த வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றும் முக்கியமானவை:
• மகா சமன் தேவாலயம் (பௌத்த)
• தூய பீட்டர்-பவுல் தேவாலயம் (கத்தோலிக்க)
• தூய லக் (இங்கிலாந்து தேவாலயம்)
• சிவன் கோவில் (இந்து)
• ஜும்மா மசூதி (இஸ்லாம்)
மகா சமன் தேவாலயம்
இந்த இடம், பௌத்த தேவதாமூர்த்தியான சமனுக்கு உரிய இடம் ஆகும். சமன் இரத்தினபுரியின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இரத்தினபுரியை போர்த்துகீசியர் கைப்பற்றிய போது, இந்த தலத்தில் இருந்த புராதன சமன் கோயிலை இடித்து, அதன் மீது போர்த்துகீசிய தேவாலயத்தை நிர்மாணித்தனர். கண்டி அரசு, இரத்தினபுரியை மீண்டும் மீட்டெடுத்த போது, போர்த்துகீசிய தேவாலயத்தை இடித்துவிட்டு மறுபடியும் சமன் ஆலயத்தை கட்டினர். பழைய பௌத்த ஆலயம் இருந்ததற்கான நேரடி ஆதாரங்காள் இல்லை.போர்த்துகீசியர் வருகைக்கும் முன்பு இந்து ஆலயத்தை போன்ற தோற்றத்துடன் இந்த ஆலயம் இருந்ததற்கான மறைமுக ஆதாரங்கள் காணப்படுகின்றன. தற்சமயம், இந்த தலம் பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது
புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம்
இரத்தினபுரியில் கத்தோலிக்கரது வரலாறு இப்பகுதியை போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்திடமிருந்து கைப்பற்றியப் பின்னர் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் வெகு சில கத்தோலிக்கரே இங்கு வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பான்மையினர் போர்த்துக்கேயர் அல்லது போர்த்துக்கேயரை திருமணம் செய்த இலங்கையர்களாக காணப்பட்டனர். போர்த்துக்கேயர் இப்பகுதியில் காணப்பட்ட பௌத்த/இந்து தேவாலயம் ஒன்றை இடித்து அதன்மீது ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாலயம் மீண்டும் இப்பகுதி கண்டி இராச்சியத்தால் கைப்பற்றப்பட்டப் போது இடிக்கப்பட்டது. தற்போதய புனித.இராயப்பர் சின்னப்பர் ஆலயம் இடம் மாற்றப்பட்டு நகரின் மத்தியில் அமைந்த மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் முத்திபேறு பெற்ற யோசப் வாஸ் அடிகளால் ஆரம்பிக்கப்பட்தாக கருதப்படுகிறது. 2 நவம்பர் 1995 இல் இரத்தினபுரி இலங்கையில் ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் பேராலயமாக மாற்றப்பட்டது.
முக்கிய நிறுவனங்கள்
தேசிய நூதனசாலை
இலங்கை தேசிய நூதனசாலையின் கிளையொன்று இரத்தினபுரி நகரில் அமைந்துள்ளது. இது இரத்தினபுரி - கொழும்பு பெருந்தெருவில் அமைந்துள்ள எகலபொல வளவு என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது 1988 மே 13 முதல் இயங்கி வருகின்றது. இங்கு இப்பிரதேசத்தில் அகழ்தெடுக்கப்பட்ட சரித்திரத்திற்கு முற்பட்டகால தொல்பொருளியற் பொருட்கள், இப்பிரதேசத்தின் இயற்கை விஞ்ஞான மரபுரிமைகள், பூகற்பவியல், மானிடவியல் மற்றும் விலங்கியல் தொடர்பான மாதிரிகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து
இரத்தினபுரி நகரை கொழும்பில் இருந்து AA4 பெருந்தெருவூடாக அவிசாவளை, எகலியகொடை, குருவிட்டை நகரங்கள் ஊடாக அணுகலாம். பேருந்துச் சேவைகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், மல்வத்தை தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுகின்றன.
பேருந்து
தனியார் மற்றும் அரச பேருந்துச் சேவைகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மேலும் இரத்தினபுரி நகரமூடாக செல்லும் தூரச்சேவை பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்தே செல்கின்றன. இரத்தினபுரி மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து வடமாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள் நடைபெறுகின்றன. காலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை கொழும்புக்கு 15 நிமிடத்துக்கு ஒரு பேருந்துச் சேவை காணப்படுகிறது. கண்டி, காலி அம்பாந்தோட்டை, கல்முனை, அம்பாறை பதுளை போன்ற நகரங்களுக்கு 1 மணித்தியாலத்துக்கு ஒரு பேருந்துச் சேவை நடைபெறுகின்றது.
சுற்றுளாத்தளங்கள்
• நீர்வீழ்ச்சிகள்
o போபத் நீர்வீழ்ச்சி
o கடுகஸ் நீர்வீழ்ச்சி
o ராஜன நீர்வீழ்ச்சி
நூதனசாலைகள்
o இரத்தினபுரி நூதனசாலை
o இரத்தினக்கல் நூதனசாலை
• இரத்தினக்கல் துறை
o இரத்தினக்கல் சுரங்கங்கள்
o இரத்தினக்கல் கோட்டை

 விபத்தில் இந்திய விமானம் எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கரம்
























































வெள்ளி, 21 மே, 2010

இலங்கையின் வரலாறு

இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.

தொடக்கத்தில் இந்துகளாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 முதல் கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின.

இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. யாழ்ப்பாண இராச்சியம் என்று வழங்கப்பட்ட இவ்வரசு ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.

[தொகு] மத்திய காலம்
போர்த்துக்கீச கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீச வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638 செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீச வசமிருந்த கரையோர பகுதிகள் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. 1796யில் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிகாததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801ரில் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்

செவ்வாய், 18 மே, 2010

சென்மொழி எம் தமிழ் மொழி

பிறக்க ஒரு நாடு.
பிழைக்க ஒரு நாடு.
இப்போ விடுமுறைக்கு
பறக்க ஒரு நாடு
சேர சோழ பாண்டியனின் சேனைகள் நாம்
சோர்வு எங்கள் வாழ்வினிலே வந்ததிலை
சாய்ந்து சற்று நிற்கின்றோம்
சழைத்து நாங்கள் போகவில்லை
வருடம் ஒன்றாகி அந்த
நெருடலின் வலி இன்னும்
இருதயத்தை இறுக்கிக்
கொண்டே இருப்பது ஒன்றும்
வியப்பில்லா விடயமாலாம்

செவ்வாய், 11 மே, 2010

புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிக்கடை

st antonys charch kochikada

வணக்கம்

வணக்கம்
வாழ்க தமிழ்